search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய்துறை அதிகாரிகள்"

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட ரூ.1.82 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கடத்தல் தங்கத்தை நெல்லூர் மாவட்டத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #goldbiscuitsseized
    ஐதராபாத்:

    ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கசமூர் தர்கா அருகேயுள்ள வெங்கடாசலம் சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்களை போலீசார் துணையுடன் வருவாய்துறை அதிகாரிகள் இன்று சோதனையிட்டனர்.

    அப்போது, ஒரு காரில் 5 கிலோ 700 கிராம் எடையுள்ள 58 தங்க பிஸ்கட்கள் மறைத்து கடத்தப்படுவதை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வெளிநாட்டு முத்திரையுடன் இருக்கும் அந்த தங்க பிஸ்கட்களின் மதிப்பு சுமார் 1.82 கோடி ரூபாய் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #goldbiscuitsseized   
    ×